Breaking News

FACT CHECK: இத்தாலியில் அனைத்து மத மக்களும் இணைந்து தொழுகை நடத்தினார்களா?உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் கொரானாவை விரட்ட  இத்தாலியில் அனைத்து மத மக்களும் இணைந்து தொழுகை நடத்தினார்கள் என ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

அந்த வீடியோ இத்தாலியில் எடுக்கபட்டது இல்லை 

அந்த வீடியோ 10.12.2019 அன்று பெரு நாட்டில் எடுக்கபட்டது ஆகும்

மேலும் அது இஸ்லாமியர்களின் தொழுகை கிடையாது

அது கிறுஸ்துவர்களின் நள்ளிரவு பிராத்தனை ஆகும் 

 ஆனால் சிலர் அந்த சம்பவம் இஸ்லாமியர்களின் தொழுகை என்றும், இத்தாலியில் நடந்தது என்றும், தற்போது நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.

அட்மின் மீடியாவின் ஆதாரம்


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback