Breaking News

BREAKING NEWS: மே 12 முதல் பயணிகள் ரயில் இயக்கப்படும் மத்திய ரயில்வே அமைச்சகம்

அட்மின் மீடியா
0
நாளை மறுநாள் மே 12 முதல் பயணிகள் ரயில் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.



நாளை மாலை 4 மணி முதல் ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் முன்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் இருந்து சென்னை உட்பட 15 நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவித்துள்லது

மேலும் ரயில் நிலையங்களில் டிக்கெட் புக்கிங் கவுண்டர்கள் செயல்படாது. பிளாட்பார்ம் டிக்கெட் கூட கொடுக்கப்பட மாட்டாது . பயணிகள் முகக்கவசம் அணிவது கட்டாயம், இவர்களுக்கு ஸ்க்ரீனிங் டெஸ்ட்டும் உண்டு, நோய் அறிகுறிகள் இல்லாதவர்களே ரயில்களில் ஏற அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் இந்த ரயில்கள்
டெல்லியிலிருந்து திப்ரூகர், அகர்தலா, ஹவ்ரா, பாட்னா, பிலாஸ்பூா், ராஞ்சி, புவனேஸ்வருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவித்துள்ளது. செக்கந்திராபாத், பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம், மட்கான், மும்பை, அகமதாபாத், ஜம்மு தாவிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.





Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback