Breaking News

ஆன்லைனில் பாடம் நடத்த தடை இல்லை: அறிவித்த சிறிது நேரத்தில் அமைச்சர் விளக்கம்

அட்மின் மீடியா
0
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருப்பதால் தனைத்து பள்ளிகளும்  மூடப்பட்டுள்ளன.


மேலும் இதனால் 1 ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புகள் வரை அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தனியார் பள்ளிகள் சில  மாணவர்களுக்கு  பாடங்களை ஆன்லைன் மூலமாக நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்பெடுக்கக்கூடாது என்றும், அப்படி செய்யும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கபடும் என்றும் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார் 

இப்படி அறிவித்த சிறிது நேரத்திலேயே தனது நிலைப்பாட்டை அமைச்சர் மாற்றிக் கொண்டுள்ளார். ஆன்லைனில் வகுப்பு எடுப்பதை தடுக்க முடியாது என்றும் ஆசிரியர்களை பள்ளிக்கு அழைத்து வந்து ஆன்லைன் மூலம் பாடம் நடத்தக்கூடாது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்

Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback