Breaking News

இன்று முதல் முன்பதிவு : நாளை முதல் பயணிகள் ரயில் சேவை: ரயில்வே அறிவிப்பு

அட்மின் மீடியா
0
கொரானா பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால்  கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் பயணிகள் நாடு முழுவதும் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. 



வெளி மாநில தொழிலாளர்களை அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதற்காக கடந்த 1-ந் தேதி முதல் முக்கிய ஊர்களில் இருந்து சிறப்பு ரெயில்கள் மட்டும் இயக்கப்படுகின்றன.


இந்தநிலையில் நாடு முழுவதும் மே 12 முதல் பயணிகள் ரயில் படிப்படியாக இயக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. 

அத்தில் முதல்கட்டமாக டில்லியிலிருந்து 15 சிறப்பு ரயில்கள் நாட்டின் முக்கிய நகரங்களுக்கு நாளை  இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் நாளை டெல்லியில் இருந்து 15 ரயில்கள் சிறப்பு ரயில்களாக இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம், மும்பை சென்டிரல், ஆமதாபாத், செகந்திராபாத், திப்ருகர், அகர்தலா, ஹவுரா, பாட்னா, பிலாஸ்பூர், ராஞ்சி, புவனேசுவரம், மட்கோன், ஜம்முதாவி ஆகிய ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும். 

இந்த ரயில்களில் பயணம் செய்ய https://www.irctc.co.in/nget/train-search இணையதள முகவரியில் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்யமுடியும். ரயில் நிலையங்களில் உள்ள பயணச் சீட்டு முன்பதிவு மையங்கள்  மூடப்பட்டு இருக்கும். இதற்கான முன்பதிவு இன்று 11.05.2020  மாலை 4 மணிக்கு தொடங்குகிறது என தெரிவித்துள்ளது.


இந்த ரயில்களில் பயணிக்க வருபவா்கள் டிக்கெட் இருந்தால் மட்டுமே ரயில் நிலையத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படுவாா்கள். 

அனைத்து பயணிகளும் முகக்கவசம் அணிந்து வருவது கட்டாயம். 

ரயில் பயணம் தொடங்குவதற்கு முன்பு உடல் வெப்பநிலை பரிசோதனை நடைபெறும். 

உடல் பிரச்னை ஏதும் இல்லை என்று உறுதி செய்யப்படும் பயணிகள் மட்டுமே ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுவாா்கள்.

ரயிலில் சமூக இடைவெளியினை பின்பற்றவேண்டும். என தெரிவிக்கபட்டுள்ளது



Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback