Breaking News

FACT CHECK: இந்த பழைய வீடியோ தற்போது பொய்யாக வலம் வருகின்றது; யாரும் நம்பாதீர்கள்

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  தமிழக பாஜக கட்சித் தலைவர் செல்வ குமார் பொறுப்பற்ற முறையில்  பணியில் இருந்த பெண் மருத்துவரை  உதைத்தார். தண்டனை கிடைக்கும் வரை அனைத்து குரூப்களுக்கும்  இந்த வீடியோவை அனுப்புங்கள் என்று   ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


திமுக கவுன்சிலர்  செல்வகுமார் தமிழகத்தின் பெரம்பூரில் உள்ள பியூட்டி பார்லர் நிலைய பெண் ஒருவரை தாக்கினார்.


இந்த சம்பவம்  13.09.2018 அன்று நடந்துள்ளது. அதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார் மேலும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களிடமிருந்து இடைநீக்கம்அனைத்து பொறுப்பிலும் மற்றும் அடிப்படை உறுப்பினரில் இருந்தும் நீக்க செய்யப்பட்டுள்ளார்.


ஆனால் சிலர் அந்த சம்பவம் தற்போது நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்


அட்மின் மீடியாவின் ஆதாரம்



எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback