Breaking News

கொரோனாவிற்க்கு புதிய சிகிச்சை முறையை கண்டுபிடித்த அமீரகம்

அட்மின் மீடியா
1
கொரோனாவை வெல்லும் புதிய சிகிச்சை முறையை கண்டுபிடித்துள்ளது துபாய்



கொரானாவினை ஸ்டெம் செல்கள் stem cells மூலமாக குணப்படுத்த முடியும் என்ற புதிய சிகிச்சையை அபுதாபி ஸ்டெம் செல் சென்டரில் உள்ள மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் குழு உருவாக்கியுள்ளார்கள்

கொரானாவினை ஸ்டெம் செல்கள் stem cells மூலமாக குணப்படுத்த முடியும் என நிரூபித்துள்ளனர் துபாய் நாட்டு மருத்துவர்கள் மேலும் இந்த சிகிச்சை முறையின் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள 73 கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டதன் மூலம் அவர்களின் உடல்நிலை குணமடைந்துள்ளார்கள் என தெரிவித்துளார்கள்


கொரோனா வைரஸ் பாதித்த நோயாளியின் சொந்த இரத்தத்திலிருந்து ஸ்டெம் செல்களைப் பிரித்தெடுத்து, அவற்றை செயல்படுத்தி மீண்டும் அவற்றை நோயாளிகளுக்குள் செலுத்துவதே இந்த சிகிச்சை முறையாகும்.


இந்த ஸ்டெம் செல் சிகிச்சையானது மருத்துவ பரிசோதனைகளின் ஆரம்ப கட்டத்தை வெற்றிகரமாக அடைந்துள்ளது. மேலும் இந்த சிகிச்சை முறையின் மூலம் சிகிச்சை பெற்ற கொரானா  நோயாளிகளுக்கு இதுவரை வேறு எந்த பாதிப்பும் அடையவில்லை. 

மேலும் இந்நோயாளிகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் சிகிச்சை நெறிமுறைகளுடன் இணைந்து, ஸ்டெம் செல் சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. 

இந்த சிகிச்சையின் செயல்திறனை நிரூபிப்பதற்கான சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும் இந்த சிகிச்சை பரிசோதனையானது இரண்டு வாரங்களில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback

1 Comments