கேரள மாநிலத்தவர்களுக்கு இலவச விமான டிக்கெட்..!! மெகாஸ்டார் மம்மூட்டி தலைமையில் திட்டம் தொடக்கம்
அட்மின் மீடியா
0
கேரளாவை சேர்ந்த திரைப்பட நடிகர் மம்முட்டி தலைமையில், கொரோனா பாதிப்புகளினால் வேலையை இழந்து தவிக்கும் கேரள மக்களுக்கு ஏர் இந்தியாவால் இயக்கப்படும் சிறப்பு விமானங்களால் திருப்பி அனுப்பப்படுவதற்காக காத்திருக்கும் இந்தியர்களில் பணமின்றி தவிக்கும் கேரளாவை சார்ந்த தொழிலாளர்களுக்கு, பிரபலமான மலையாள சேனலான கைராலியின் சார்பாக இலவச விமான டிக்கெட்டுகள் வழங்கப்பட இருப்பதாக அதன் நிர்வாக இயக்குனர் ஜான் பிரிட்டாஸ் தெரிவித்துள்ளதாக அமீரகத்தின் ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து ஜான் பிரிட்டாஸ், “வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் கேரளா மாநிலத்தவர்களில் மிகவும் பின்தங்கியவர்களுக்கு 1,000 விமான டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்படும்” என்று கூறியுள்ளார்.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான கேரளாவின் ஆளும் இடது ஜனநாயக முன்னணிக்கு தலைமை தாங்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நடத்தும் தென்னிந்திய சேனலான கைராலி டிவியின் தலைவராக மெகாஸ்டார் மம்மூட்டி இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வந்தே பாரத் எனும் திட்டத்தின் அடிப்படையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் இதுவரையிலும் 64 விமானங்கள் மூலம் இந்த திருப்பு அனுப்பும் நடவடிக்கையை முதல் கட்டமாக 12 நாடுகளில் மேற்கொண்டு வருகின்றது.
Tags: முக்கிய செய்தி