சித்த மருத்துவத்தால் கொரோனாவை குணப்படுத்த முடியுமா? ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
அட்மின் மீடியா
0
கொரானாவை குணப்படுத்துவதாகக் கூறப்படும் சித்த மருத்துவ மூலிகை கலவையை நிபுணர் குழு பரிசீலித்து முடிவை தெரிவிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களை சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியும் என்பதை ஆய்வுகள் மூலமாக நிரூபிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி விழுப்புரம் முத்துக்குமார், ஆயுஷ் மருத்துவர்கள் சங்கத் தலைவரான கே.எம்.செந்தமிழ்செல்வன் உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்து இருந்தனர்.
இந்த வழக்கு நேற்று விசாரனைக்கு வந்தது அதில் கொரானாவுக்கு இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்காத நிலையில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி போன்ற பாரம்பரிய மருத்துவத்தில் தடுப்பு மருந்துகளும், குணப்படுத்தும் மருந்துகளும் உள்ளன. இதை நிரூபித்துக்காட்டவும் மனுதாரர்கள் தயாராக உள்ளனர், என வாதிட்டார்.
அப்போது தமிழக அரசு தரப்பில் இதுதொடர்பாக நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், கொரானாவை குணப்படுத்துவதாகக் கூறப்படும் சித்த மருத்துவ மூலிகை கலவையை நிபுணர் குழு ஒரு மாதத்தில் பரிசீலித்து அதன் முடிவை மனுதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்துள்ளனர்
Tags: முக்கிய செய்தி