நாளை முதல் துபாயில் ஊரடங்கு தளர்வு: அனுமதிக்கப்பட்டுள்ள துறைகளின் பட்டியல்..!!
அட்மின் மீடியா
0
துபாயில் கொரானா பரவலை தடுக்க எடுக்கபட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பெரும்பாலான வணிக நிறுவனங்கள் மற்றும் பொழுதுபோக்கு தளங்கள் நாளை (மே 27) முதல் மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது
மேலும் அந்த அறிவிப்பின் படி நிறுவனங்கள் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்திருக்கலாம் எனவும், இந்த நேரங்களில் பொதுமக்களின் நடமாட்டத்திற்கு எந்த தடையும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அனுமதிக்கப்பட்டுள்ள துறைகளின் பட்டியல்..!!
- சமூக இடைவெளியுடன் சினிமா தியேட்டர்கள்
- துபாய் மால் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள்
- விளையாட்டு அகாடமிகள், உட்புற ஜிம்கள் (indoor gyms), உடற்பயிற்சி மற்றும் சுகாதார கிளப்புகள் (fitness and health clubs)
- சில்லறை கடைகள் மற்றும் மொத்த விற்பனை கடைகள்
- கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் (Academic and coaching institutes), குழந்தைகள் பயிற்சி மற்றும் சிகிச்சை மையங்கள் (therapy centres).
அமர் (Amer Service) போன்ற அனைத்து அரசு சேவை மையங்கள்
பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்
- 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள் ஷாப்பிங் சென்டர்கள், சினிமாக்கள், ஜிம்கள் போன்ற இடங்களுக்கு செல்ல அனுமதி இல்லை.
- பொது வெளியில் நடமாடும் அனைவரும் எல்லா நேரங்களிலும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும்.
- ஒருவருக்கு ஒருவர் குறைந்தபட்சம் இரண்டு மீட்டர் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
- அமீரகத்திற்கு திரும்பி வரும் அனைத்து வெளிநாட்டு பயணிகளும் 14 நாள் தனிமைப்படுத்தலை கடைபிடிக்க வேண்டும்
Tags: முக்கிய செய்தி வெளிநாட்டு செய்திகள்