Breaking News

தனியார் பள்ளிகள் ஆன்லைன் கிளாஸ் நடத்தினால் கடும் நடவடிக்கை! - கல்வி அமைச்சர் செங்கோட்டையன்

அட்மின் மீடியா
2
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருப்பதால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.



மேலும் இதனால் 1 ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புகள் வரை அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தனியார் பள்ளிகள் சில  மாணவர்களுக்கு  பாடங்களை ஆன்லைன் மூலமாக நடத்தி வருவதாக கூறப்படுகிறது.


இந்நிலையில் மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்பெடுக்கக்கூடாது என்றும், அப்படி செய்யும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஊரடங்கின் போது கல்வி கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கபடும் என்றும் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback

2 Comments

  1. What to do if private schools force to pay the fee?

    ReplyDelete
  2. Already they are forcing. Every getting 2 calls

    ReplyDelete