Breaking News

தமிழகத்தில் 8 மண்டலமாக பிரிப்பு எங்கு எங்கு போக்குவரத்து முழு விவரம்

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் பொது பேருந்து தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள பொது பேருந்து போக்குவரத்து நடைமுறை குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு வெிளியிட்டுள்ள அறிக்கையின் படி, மாநிலத்தில் பொது பேருந்து போக்குவரத்தை 1.6.2020 முதல்நடைமுறைப்படுத்தும் பொருட்டு,  மாநிலம் கீழ்கண்ட 8 மண்டலங்களாக பிரிக்கப்படுகிறன. 



மண்டலம் 1 : கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் மற்றும் நாமக்கல்


மண்டலம் 2 : தருமபுரி, வேலுhர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி


மண்டலம் 3: விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி 


மண்டலம் 4 : நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி,அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை


மண்டலம் 5 : திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம்


மண்டலம் 6: தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி


மண்டலம் 7 : காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு


மண்டலம் 8 : சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிமண்டலம் 7-ல் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டுமாவட்டங்கள் மற்றும் 


மண்டலம் 7 மற்றும் மண்டலம் 8க்கு உட்பட்ட பகுதிகளில் பொதுபோக்குவரத்து பேருந்துகளின் இயக்கத்திற்கு தடை தொடர்கிறது. 

மற்ற அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் தனியார் பேருந்துகளும்இயக்க அனுமதிக்கப்படுகிறது.

பேருந்துகளில் உள்ள மொத்த இருக்கைகளில், 60 சதவிகித இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

வெளிமாநிலங்களுக்கு சென்று வரவும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வரவும் மண்டலங்களுக்கிடையே சென்று வரவும் இ பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.


அதாவது ஒருவர் 1 வது மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் ஒருவர் எங்குவேண்டுமானாலும் எந்த வாகனத்திலும் செல்லலாம் அதற்க்கு இ பாஸ் வேண்டாம்


ஆனால் ஒருவர் 1 வது மண்டலம் தவிர்த்து வேறு மண்டலம் செல்ல கண்டிப்பாக இ பாஸ் வாங்க வேண்டும்  


Tags: தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback