ஜூன் மாதத்திற்க்கான விலையில்லா ரேசன் பொருட்கள் 29 ம் தேதியில் இருந்து டோக்கன் வழங்கபடும்.
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூன் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும், அதாவது சர்க்கரை 1Kg, துவரம் பருப்பு 1Kg, சமையல் எண்ணெய் 1L, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதல் அரிசியுடன் எப்பொழுதும் வழங்கப்படும் அரிசி ஆகியவை விலையின்றி வழங்கப்படும்.
வருகின்ற 29.5.2020 முதல் 31.5.2020 வரை, குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும்.
சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள், டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில், தத்தமது நியாய விலைக் கடைகளுக்குச் சென்று அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.
Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி