10-ம் வகுப்பு தேர்வு நடைபெறுமா? வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
அட்மின் மீடியா
0
கொரானா ஊரடங்கால் அனைத்து தேர்வுகளும் தள்ளிவைக்கபட்டநிலையில் 10ம் வகுப்பு தேர்வுகள் ஜூன் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடக்கும் என்றும் பிளஸ் 1 வகுப்புக்கான தேர்வில் மார்ச் 26ம் தேதி நடக்க இருந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதால் அந்த தேர்வு ஜூன் 2ம் தேதி நடத்தப்படும் எனவும் அதேபோல 12ம் வகுப்பு கடைசி தேர்வு கடந்த 24ம் தேதி பலர் எழுத முடியாமல் போனது. அதனால், அந்த மாணவர்களுக்கு ஜூன் 4ம் தேதி தேர்வு நடத்தப்படும். என தமிழக கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அறிவித்தார்.
இந்நிலையில் அறிவிக்கப்பட்ட 10ஆம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஸ்டாலின் ராஜா என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார் இந்த மனு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இன்றைய விசாரணையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா? இல்லை தள்ளி வைக்கப்படுமா என தெரியும்
Tags: தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு