1 ம் வகுப்பு முதல் 9 ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி : தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை தேர்வு நடத்த முடியாத நிலையில், அவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தது.
இந்நிலையில், சில தனியார் பள்ளிகள், பள்ளிகள் திறக்கப்பட்டதும், ஏற்கனவே படித்த பாடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு, அந்த மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்படும் என சில தனியார் பள்ளிகள் பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாக புகார் வந்துள்ளது
இது தமிழக அரசின் ஆணையை மீறிய செயலாகும் என்றும் விதிகளை மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி