Breaking News

உயிரிழந்தோர் உடல் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தால் குண்டர் சட்டம் பாயும்: காவல் ஆணையர் எச்சரிக்கை

அட்மின் மீடியா
1
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கொரோனா சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநராக இருந்த மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு  நேற்று முன்தினம் உயிரிழந்தார். பின்னர் அவரது உடலை கீழ்ப்பாக்கம் மயானத்தில் தகனம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அவரது உடல் வேலங்காடு இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. 



மேலும்  மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த 20 பேரை அதிரடியாக கைது செய்தனர். மேலும், அந்த போராட்டத்தில் ஈடுபட்ட 90 நபர்கள்  மீது 6 பிரிவுகளில்  வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது

இதுகுறித்து அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அவர்கள்  உத்தரவு பிறப்பித்துள்ளார். 


அதில். கொரானா நோய்த்தொற்று காரணமாக மருத்துவரோ, சாதாரண நோயாளிகளோ யார் உயிரிழந்தாலும் அவர்கள் உடலை அடக்கம் செய்யத் தகுந்த பாதுகாப்பை அளிக்க வேண்டும். மேலும் உடல் அடக்கத்துக்கு யாராவது எதிர்ப்பு தெரிவித்து அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தாலோ, தாக்கினாலோ இடையூறு செய்தாலோ அவர்கள் மீது  குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்' என உத்தரவிட்டுள்ளார்.

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback

1 Comments

  1. இதை தான் எதிர் பார்தேன்

    ReplyDelete