கல்விக் கட்டணம் செலுத்த கட்டாயபடுத்தக் கூடாது - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
அட்மின் மீடியா
0
கொரோனா ஊரடங்கு நேரத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களிடம் 2020-21-ஆம் ஆண்டுக்கான கல்விக் கட்டணம் மற்றும் 2019-20 நிலுவைத் தொகையினைச் செலுத்த கட்டாயபடுத்தக் கூடாது என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது
ஆண்டு கல்வி கட்டணம் , மற்றும் மாத கல்வி கல்விக் கட்டணங்களை கட்டவேண்டும் என மாணவர்களின் பெற்றோருக்கு பல தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறுந்தகவல்கள் அனுப்பி வருகின்றன.
இது பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 28 நாட்களாக மக்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர்.
இது குறித்து உடனடியாக தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாநிலம் முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே ஊரடங்கு முடியும் வரை பேரிடர் மேலாண்மை சட்டம் 2005ன் கீழ் இதனை அனைத்து தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள் கடைபிடிக்க வேண்டும். மேலும் கல்விக் கட்டணம் செலுத்த கட்டாயபடுத்தக் கூடாதுஇவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
Tags: முக்கிய அறிவிப்பு