Breaking News

சென்னையில் இலவச அவசரகால கேப் சர்வீஸ்: அறிமுகம்

அட்மின் மீடியா
0
சென்னையில் முதியோா்கள், கா்ப்பிணிகள், நோயாளிகளின் அவசர கால மருத்துவத் தேவைகளுக்காக மஹிந்த்ரா லாஜிஸ்டிக்ஸ் அலைட்' என்ற பெயரில் இலவச காா் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. 



சென்னையில்  மருத்துவப் பரிசோதனைகளுக்கோ அல்லது மருத்துவ ஆலோசனைகளுக்கோ செல்வது, வங்கிக்குச் செல்வது, தபால் நிலையங்களுக்குச் செல்வது, அல்லது வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவ சந்திப்புகளுக்குச் செல்வது என எதுவானாலும், பாதுகாப்பான போக்குவரத்து வாய்ப்பில்லாத மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், பிரசவத்தை எதிர்நோக்கியிருக்கும் பெண்கள் உள்ளிட்டவர்கள் அலைட் வழங்கும் இலவச அவசரகால வாகன சேவையைப் பெறலாம்.


9500067082 என்ற எண்ணிற்கு அழைப்பதன் மூலம், சென்னையில் இந்த இலவச கேப் சர்வீஸ் சேவையைப் பெறலாம்.

இது அவசரகால சேவை என்பதால் சாதாரண காரணங்களுக்காக அழைப்பதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும்.




Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback