போன் செய்தா போதும் மெடிக்கலில் இருந்து மருந்து வீடு தேடி வரும்
அட்மின் மீடியா
0
கொரானா பரவலை தடுக்க ஊரடங்கு ஏர்பல் 30 ம் தேதி வரை நீட்டிக்கபட்டநிலையில் மெடிக்கலில் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கவும், கூட்டம் கூடாமல் இருப்பதற்காகவும் மருந்துகளை வீட்டிற்கு கொண்டு வந்து கொடுக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அதன்படி 18001212172 என்ற எண்ணிற்கு அழைத்தால் மெடிக்கலில் இருந்து வீட்டிற்கே வந்து மருந்து வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
ஆனால் மருத்துவரின் சீட்டு இருந்தால் மட்டுமே மருந்து வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் 3000 மருந்தகங்களை இணைக்கும் பணி தொடங்கபட்டுள்ளது. தற்போது சென்னையிலும் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டம் சில தினங்களில் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Tags: முக்கிய அறிவிப்பு