Breaking News

ஊரடங்கில் ஆரம்பிக்கும் ரமலான் : கஷ்டங்களில் இருந்து நீங்க அனைவரும் பொறுமை கொள்வோம்:

அட்மின் மீடியா
1
நம் கஷ்டங்கள் நீங்கிட  நாம் பொறுமை கொள்வோம்




தற்போது உலகமெங்கும் கொரானா நோய்த்தொற்றின் காரணமாக ஊரடங்கு உத்தரவை பல நாடுகள் அமல் படுத்தி உள்ளது இந்தியாவிலும் ஊரடங்கு  உத்த்ரவினை இந்திய அரசு  மே மாதம் 3ம் தேதி  வரை நீடித்துள்ளது


இன்ஷா அல்லாஹ் இன்னும் சில  தினங்களில் ரமலான் நோன்பு ஆரம்பமாக இருக்கிறது இதற்க்கு முன்பு நாம் இது போல் ஒரு நெருக்கடியான காலகட்டத்தினை சந்தித்தது இல்லை. இந்த தடைஉத்தரவு காலம்வரை பள்ளிவாசலுக்கு செல்ல வேண்டாம் என்று ஜமாஅத்துல் உலமா சபை அறிவித்திருக்கிறார்கள். இஸ்லாமியர்களாகிய நாம்  தலைமைக்கு கட்டுப்படுவது நபி வழியாக இருக்கிறது  இந்த முடிவு ஒட்டுமொத்த உலமாக்கள் சேர்ந்து மசூரா செய்து எடுத்திருக்கும்  முடிவு இது

அரசாங்கம் நம்மை பள்ளிவாசலுக்கு செல்ல விடாமல் தடுக்கிறது என்கிற கோணத்தில் நாம் இதனை பார்க்க வேண்டியதில்லை சூழ்நிலையை அனுசரித்து நடப்பதும் ஆட்சிக்கு கட்டுப்படுவதும் நம் மீது கடமையாக இருக்கிறது மார்க்க சட்டங்களை நன்கு ஆராய்ந்து அதன்பிறகே உலமாக்கள் வீட்டிலேயே தொழுது கொள்ளுங்கள் என்று அறிவித்து இருப்பார்கள் அதனால் யாருக்கும் எந்த  குற்றமும் வந்துவிடாது அல்லாஹ் மன்னிக்கக் கூடியவனாகவும் கருணை உள்ளவனாகவும் இருக்கிறான்



இன்னும் கூடுதலாக நன்மை கிடைக்கும் என்கிற நோக்கில்கூட்டாக ஜும்மா நடத்தலாம் தராவீஹ் நடத்தலாம் என்று கூட்டம் சேர வேண்டாம். நாம் ஏதாவது எங்காவது அவசரபட்டு செய்யும் தவறு ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும்  அவமானப்படுத்த காரணமாக அமைந்துவிடுகிறது. நம் செயலை ஒட்டு மொத்த சமூகமும் பார்த்து கொண்டு இருக்கின்றார்கள். நம் கடமையான தொழுகைகளை வீட்டில் தொழுது அதிக அதிகமாக இபாதத்துகள் செய்து நன்மைகளை பெற்று அல்லாஹ் நம் மீது  பிரியம் கொள்ள வைக்கவேண்டும்  


பெரும்பாலும் பலர் நோன்பு காலத்தில் நான்காவது கடமையான ஜக்காத் நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் சரியாக கணக்குப் பார்த்து கொடுத்து கொண்டிருந்தவர்களும் இப்போது வியாபார ரீதியிலும் வேலை இழப்பின் காரணமாகவும் பாதிக்கப்பட்டு இருப்பதால் பல சிரமங்களை சந்திக்க வேண்டி இருக்கிறது இருந்தாலும் கட்டாயக் கடமையாக இருப்பதால்
நிறைவேற்றியே ஆகவேண்டும் இந்தச் சூழ்நிலையில் நாம் பல மாதிரியான சிரமங்களையும் செலவுகளையும் சந்திக்கிறோம் 

நமது சிந்தனைகள் திசை திரும்பி விடாமல் வழக்கமான நமது கடமையை நிறைவேற்றவும் நம்மை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சொந்தங்கள் மற்றும் தேவையுடையவர்களுடைய சிரமங்களைப் போக்கும் வகையிலும் இருக்கும் கையிருப்பிணை வேறுவகையில் செலவு செய்வதை குறைத்துக்கொண்டு கட்டாய கடமையான ஜகாத்தை சரியாக நிறைவேற்ற எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு உதவிட வேண்டும்.

அடுத்து நோன்பு நாட்களில் சதக்கா கொடுப்பது பல மடங்கு நன்மையை பெற்றுத் தரும் செயலாக இருக்கிறது பாவங்களிலிருந்து நீங்கிட நமது துஆ கபுல் ஆகவும் நிறைய சதகா கொடுக்க வேண்டும். 


இன்ஷாஅல்லாஹ் நோன்பின் முதல் வாரத்திற்கு பிறகு தடை உத்தரவு காலம் முடிவடைந்துவிடும் இறைவன் நாடினால் அதிலிருந்து நமக்கு தொழுகை ஜும்ஆ தராவிஹ் போன்ற கடமைகளை பள்ளியில் நிறைவேற்றலாம் அனைவரும் இது சம்பந்தமாக அல்லாஹ்விடம் அதிக அதிகம் அதிகம் பிராத்தனை செய்வோம்.

பள்ளிகளில் சமுக இடைவெளியில் நோன்பு கஞ்சி கொடுக்க அரசிடம் அனுமதி கோருவோம் பலருக்கு அதுவே உணவாக கூட இருக்கலாம். இன்ஷா அல்லாஹ் இன்றிலிருந்து   




நபி யூனுஸ் (அலை) அவர்கள் மீன் வயிற்றில் இருந்த போது கேட்ட அதிகமதிகம் ஓதி கொள்ளுங்கள் 

லாயிலாஹ இல்லா அன்த சுப்ஹானக இன்னீ குன்து மினல் ழாலிமீன் 

பொருள்: உன்னைத் தவிர வணக்கத்துக்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன். 


ஒவ்வொருவரும் இதைக் கூறுவாரானால் அவரது பிரார்த்தனை அங்கீகரிக்கப் படாமல் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: ஸஅது (ரலி), நூல்: திர்மிதி 3427

அல்லாஹ் சொல்கிறான் யூனுஸ் நபியவர்களின் கஷ்டத்தை நீங்கியதைப்போல் மூமின்கள் ஓதினால் அவர்களின் கஷ்டத்தையும் நீக்கி வெற்றியை கொடுப்போம் என்கிறான். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்துகுடியுரிமை பிரச்சனையிலிருந்தும்  கொரானா வரை அனைத்து பிரச்சனிகளிலும் நமக்கு வெற்றி கிடைக்க அனைவரும் துஆ செய்வோம்

Tags: மார்க்க செய்தி

Give Us Your Feedback

1 Comments