Breaking News

தன்னார்வலர்கள் நிவாரணப் பொருட்களுக்கு தமிழக அரசு தடையா ....

அட்மின் மீடியா
0
இந்தியாவில் கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

இதனால் அரசு பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள விதித்து வருகிறது. இந்த ஊரடங்கு உத்தரவால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்யும் விதமாக பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் , தன்னார்வலர்களும் உதவி செய்து வருகின்றனர் இதனால் ஏழை, எளிய மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து வந்தார்கள்


இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, தன்னார்வலர்கள் ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback