Breaking News

மருத்துவர்களே நிஜ ரியல் ஹீரோக்கள் : அவர்களுக்கு இந்த நிலையை தரலாமா? நண்பரின் கண்ணீர் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0
சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநராக இருந்தவர் புகழ்பெற்ற நரம்பியல் மருத்துவர் சைமன் ஹெர்குலஸ் அவருக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் கொரொனா  கண்டறியப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். 


இந்நிலையில், நேற்று (ஏப்.19), ஞாயிற்றுக்கிழமை, சிகிச்சை பலனின்றி மருத்துவர் சைமன் உயிரிழந்தார் அவரது உடலை சென்னை  வேலப்பாங்காடு சுடுகாட்டிற்கு அட்க்கம் செய்ய எடுத்து சென்றுள்ளார்கள் சென்றுள்ளார்கள்  கொரோனா தொற்றுள்ள உடல் என்பதால் அவரது மனைவி, மகன் மற்றும் நண்பர்கள் என  சிலர் மட்டுமே உடலை எடுத்து சென்றுள்ளனர். 

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் உடலை இங்கே புதைக்கக் கூடாது என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒருகட்டத்தில் அவர்களை தாக்க தொடங்கியுள்ளார்கள் அவர்களிடம்  இருந்்துதப்பித்து வந்துள்ளார்கள்


சம்பவம் குறித்துத் தகவலறிந்த போலீஸாரும் மாநகராட்சி அதிகாரிகளும் தலையிட்டு அதே ஆம்புலன்ஸ் வாகனத்தில் பிரேதத்தை நள்ளிரவு 1 மணியளவில் வேலங்காடு கல்லறைக்குக் கொண்டு வந்து அடக்கம் செய்தனர். 

அப்போதும் போலீஸாருடனும், அதிகாரிகளுடனும் தகராறு செய்து, பணி செய்ய விடாமல் தடுத்த 20 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர் 

உயிரிழந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தாக்கிய சம்பவம் சக மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற செயல்களை கைவிடுமாறு மருத்துவர் பாக்யராஜ் கண்ணீரோடு கோரிக்கை விடுத்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகின்றது.


Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback