வீட்டை விட்டு வெளியே வந்தால் மாஸ்க் கட்டாயம் : சென்னை , கோவை, திருப்பூர் மாநகராட்சி அதிரடி அறிவிப்பு
அட்மின் மீடியா
0
கொரோனா வைரஸ் தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் சென்னையில் வெளியே செல்வோர் மாஸ்க் அணிவது கட்டாயம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை, கோவை மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முகக் கவசம் அணியாமல் வாகனங்களில் சென்றால் வாகனங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுவதுடன் உரிய நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதேபோல் கோவை மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்று ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
Tags: முக்கிய அறிவிப்பு