சென்னை மக்களே இந்த செய்தியினை நம்பாதீங்க? சென்னை மாநகராட்சி
அட்மின் மீடியா
0
கொரானாவைவிட அதன் வதந்தி வலைதளங்களில் அதிகமாக பரவுகின்றது. அந்த வகையில் ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பொய்யாக பரவுகின்றது
ஊரடங்கில் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் எளிதாகக் கிடைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அந்த வகையில் அது பற்றிய தகவல்களை செய்தி ஊடகங்கள் வாயிலாகவும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் அவ்வப்போது தெரிவித்தும் வருகிறது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் அத்தியாவசியப் பொருட்களை வீடு தேடி வந்து கொடுக்கும் எந்த சேவையும் சென்னை மாநகராட்சி செய்யவில்லை யாரும் நம்பவேண்டாம் என தெரிவித்துள்ளது
Dear Chennai,— Greater Chennai Corporation (@chennaicorp) April 17, 2020
Please be informed that the mentioned numbers are #GCC helplines only. You can call them for any other assistance or help, but we are NOT doing any on-call home delivery of provisions. This particular forward message is fake.
#GCCMythBusters
#ChennaiCorporation pic.twitter.com/AYMj8iTtkS
Tags: மறுப்பு செய்தி