Breaking News

மருத்துவர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை: மத்திய அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0
மருத்துவர்கள், தூய்மை பணியாளர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்



மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களை துன்புறுத்தினால் 6 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும்  ஒரு மாதத்தில் விசாரணை மருத்துவர்களை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்படும் அவசரச்சட்டத்தின் கீழ் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டால் விசாரணை ஒரு மாதத்திற்குள் முடிவடையும். மேலும் ஜாமீனில் வெளிவரமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.  தண்டனை மட்டுமல்லாது, 1 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் வரை அபாதமும் விதிக்கப்படும். என அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். 



Tags: முக்கிய அறிவிப்பு

Share this