தமிழகத்தில் வரும் 30ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் வரும் 30ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
தமிழகத்தில் 144 தடை உத்தரவு ஏப்ரல் 30ந் தேதி வரை அமலில் இருக்கும்
ஊரடங்கு நீட்டிப்பால் ரேசன்கார்டுதாரர்களுக்கு மே மாதத்திற்கான பொருட்கள் ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் விலையில்லாமல் வழங்கப்படும்
கட்டிடத் தொழிலாளர்களுக்கும் அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் மீண்டும் ரூ.1000 வழங்கப்படும்
காலை 6மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பேக்கரிகள் செயல்படலாம், பார்சல் முறையில் மட்டும் விற்பனை நடைபெற வேண்டும்
பிறமாநில தொழிலாளர்களுக்கு 15கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் வழங்கப்படும்
ஊரடங்கை தளர்த்தினால் நோய்த்தொற்று அதிகரிக்கும் என்பதால் தற்போது வாபஸ் பெறப்படவில்லை உலக சுகாதார நிறுவனத்தின் கருத்து மற்றும் மருத்துவ வல்லுனர்களின் அறிவுறுத்தலின் அடிப்படையில் ஊரடங்கு நீட்டிப்பு எனவும் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்படுகின்ற அனைத்து வழிமுறைகளையும் தவறாமல் பின்பற்றி, "விழித்திருங்கள், விலகி இருங்கள், வீட்டில் இருங்கள்" என்ற அடிப்படையில், சமூக இடைவெளியை கடைபிடித்து, கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும் வேண்டி கேட்டுக் கொள்கிறேன் என முதல்வர் பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்
Tags: முக்கிய அறிவிப்பு