Breaking News

தமிழகத்தில் என்பிஆர் கணக்கெடுப்பு பணி நிறுத்தி வைப்பு...அமைச்சர் உதயகுமார் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
என்பிஆர் பணி தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் உதயகுமார் அவர்கள்  அறிவித்துள்ளார். 


2021-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு வருகிற ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 30-ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். இந்த கணக்கெடுப்பின்போது 31 கேள்விகள் கேட்கப்படும் என தமிழக அரசு அதற்குண்டான அரசானையை நேற்று முன்தினம்  வெளியிடப்பட்டது.


இந்நிலையில் என்பிஆர் குறித்து தமிழக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் அவர்கள் இன்று  செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். 

மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக என்பிஆர் கணக்கெடுப்பு நடக்கிறது. தற்போது கொண்டு வரப்பட்டுள்ள என்பிஆரில் கூடுதலாக 3 கேள்விகள் உள்ளன.

என்பிஆர் கேள்விகள் தொடர்பான விளக்கங்களை மத்திய அரசிடம், தமிழக அரசு கேட்டுள்ளது. மத்திய அரசு இன்னும் அளிக்காத நிலையில் தமிழகத்தில் என்பிஆர் கணக்கெடுப்பு பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மட்டும் நடத்தப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கப்படும் என அறிவித்துள்ளார்

Tags: தமிழக ஷாஹீன்பாக்

Give Us Your Feedback