Breaking News

திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்த இளைஞர் தப்பி ஓட்டம் : செய்தி உண்மையா

அட்மின் மீடியா
0
திருச்சி அரசு பொது மருத்துவமனையில் இருந்து கொரானா வைரஸால் பாதிக்கப்பட்ட உறையூரை சேர்ந்த இளைஞர்  தப்பியோட்டம்....இவரிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்கவும்

என்று ஒரு செய்தியை சமுகவளைதளத்தில் பலர் ஷேர் செய்கின்றார்கள்

அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது 

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

இந்த சம்பவம்  29 ஜனவரி 2020 ல் மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனியில் மருத்துவ மாணவர்கள் சீனாவின்  வுஹானில் இருந்து திரும்பி வந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு அவர்களை  தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் வைக்கப்பட்டு இருந்தனர்

இரத்த பரிசோதனைகள் நடத்தப்பட்டு புனேவில் உள்ள ஒரு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. 

அந்த செய்தியின்  உள்ள ஒரு போட்டோவை எடுத்து தங்களுக்கு பிடிக்காதவர்களின் போட்டோவுடன் இந்த செய்தியை இணைத்து பொய்யாக பரப்புகின்றனர்

அட்மின் மீடியா ஆதாரம்


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback