தமிழக ஷாஹின்பாக் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட அனைத்து இஸ்லாமிய
மக்களுக்கும் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பாக வேண்டுகோள் வைக்கப்பட்டது
அந்தவகையில் வண்ணாரபேட்டை பகுதியில் கடந்த 32 நாட்களாக
நடைபெற்று வரும் ஷாகின் பாக் போராட்டம் தற்போது அனைத்து இஸ்லாமிய
தலைவர்களின் கோரிக்கை ஏற்று போராட்ட குழு சார்பாக இன்று மதியம் லுஹர்
தொழுக்கைக்கு பிறகு மசூரா செய்யபட்டது.
மசூராவின் முடிவில் ஷாகின் பாக் போராட்டத்தை கைவிட முடியாது எனவும்
தொடர்ந்து நடைபெறும் எனவும் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும்
வரையில் தொடர் தர்ணா போராட்டம் தொடர்ச்சியாக நாங்கள் போராட்டத்தை வீரியமுடன் நடத்தபோகின்றோம் என போராட்ட
குழு அறிவித்துள்ளார்கள்