கோழிகறியில் கொரோனா என வாட்ஸ்அப்-பில் வதந்தி பரப்பியவர் கைது..
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக கோழி கறியில் கொரானா வைரஸ் பரவி வருகின்றது என சமூக வலைதளங்களில் பரவிய பொய்யான தகவலால் பிராய்லர் கோழி விற்பனை சரிந்தது
இதுதொடர்பான கறி கோழி உற்பத்தியாளர்கள் பல்வேறு விளக்கம் அளித்தும், தமிழக அரசு விளக்கம் அளித்தும் பலரும் பொய்யான செய்தியினை பரப்பிகொண்டுதான் உள்ளார்கள்
இது குறித்து தமிழக காவல்துறையும் வதந்தி பரப்பினால் கைது செய்யபடும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்கள்
இந்நிலையில் கோழிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக வாட்ஸ்அப்-பில் வதந்தி பரப்பியதாக கரூர், தென்னிலையைச் சேர்ந்த பெரியசாமி என்பவரை கைதுசெய்தனர்.
தன்னுடைய வாட்ஸ்அப் எண்ணிலிருந்து பொய்யான தகவலை பெரியசாமி பரப்பியது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags: முக்கிய அறிவிப்பு