Breaking News

இந்த ஊரடங்கு உத்தரவை குடும்பத்தோடு எப்படி கழிக்கலாம் அட்மின் மீடியாவின் ஆலோசனைகள்

அட்மின் மீடியா
0
காலம் பொன்போன்றது போன நேரம் திரும்பாது என்று தமிழில் பழமொழி கூறுவார்கள்...


அது போன்று இஸ்லாத்தில் பொருள்களை  உணவுகளை வீண் விரயம் செய்யக் கூடாது அதுபோன்றுதான் காலமும் அந்த காலத்தையும் நாம் வீண் விரயம் செய்யக் கூடாது...


இந்த 21 நாட்களை நாம் எப்படி காலத்தை வீண் விரயம் செய்யாமல் எப்படி பொழுதை கழிக்கவேண்டும் என அட்மின் மீடியாவின் அழகிய ஆலோசனைகள்







இன்றைய சூழலில் திரைப்படங்கள், சீரியல்கள், மொபைல் போன்களில் கேம் விளையாடுவது, போன்ற இன்னும் பல விசயங்கள் வீன் விரயத்திற்கான முக்கியகாரணம்.

நம்முடைய வாழ்க்கையின் எந்த ஒரு நொடியும் வீணாக கழிந்து விடக் கூடாது இது போன்ற தடை உத்தரவு நேரங்களில் நற்காரியங்களில்  ஈடுபடா விட்டால் தீமையில் ஈடுபடும் நிலைக்கு மனிதன் தள்ளப்படுவான்.


ஆகவே 144 தடை உத்தரவு  நாட்களிலேனும் பிள்ளைகளுக்கு நல்ல நெறிமுறைகளை போதிப்பது நல்ல விடயங்களை கற்றுக்கொடுப்பது பெற்றோர்களின் கடமை மேலும் அவர்களுக்கு முன்னுதரனாமாக அவர்களில் ரோல்மாடலாக தங்களை மாற்றிக்கொள்வதும் மிக அவசிமானது...

எனவே தான் இந்த 21 நாள் தடை உத்தரவு நாட்களில் உங்களுக்கு கிடைத்த நேரங்களை பயனுள்ளதாக அமைத்துக் கொள்ளுங்கள் 

இந்த 21 நாட்கள் என்பது நம் வாழ்நாளில் மிகவும் முக்கியமான நாளாகும்....இதில் நாம் நம்மை தனிமை படுத்திக்கொண்டு நம்மையும், நாட்டு மக்களை காத்துக்கொள்ளவும் இந்த தருணம் மிகவும் அவசியமானதாகும்...

இந்த காலக்கட்டம் உங்கள் குடும்பத்துடன் கழிப்பதற்கு ஒரு மிகசிறந்த வாய்ப்பாகும்...

தயவு செய்து உங்கள் பிள்ளைகள் கையில் ஒரு மொபைல் உங்கள் கையில் ஒரு மொபைல் என நேரத்தை வீணடிக்காதீர்கள்...

வீட்டில் இருக்கும் உங்கள் பெண்களுக்கு உறுதுணையாக இருங்கள், வீட்டு வேலைகளை பங்கிட்டு கொள்ளுங்கள் அதை உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுங்கள்...

உங்கள் குழந்தைகளுடன் சகஜமாக பேசுங்கள் ஆக்கப்போர்வமான சிந்தனைகளை விதையுங்கள்,வரலாறுகளை சான்றுகளுடன் எடுத்துக்கூறுங்கள்...

ஒழுக்க நெறிமுறைகளை எடுத்து கூறுங்கள் பிரரிடத்தில் எப்படி நடக்கவேண்டும் பேச வேண்டும் என்று சொல்லிக்கொடுங்கள் பெண் பிள்ளைகளுக்கு good touch எது...? Bad touch எது...? என சொல்லிக்கொடுங்கள்...

வயதுக்கு வந்த பெண் பிள்ளைகள் இருந்தால் சமைக்க கற்றுக்கொடுங்கள் வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள சொல்லிகொடுங்கள்...

அவர்களுக்கு ஏதேனும் வெளியுலகில் பிரச்சனை உள்ளதா என கேளுங்கள் friendly ஆக இருக்க முயலுங்கள்...

வீட்டில் பெரியவர்கள் இருந்தால் உங்கள் குடும்பத்துடன் அமர்ந்து அவர்களிடம் பேசுங்கள் அறிவுரைகளை கேளுங்கள் அவர்கள் அருவைகள் அல்ல அனுபவசாலிகள் என்று உணர்வீர்கள்...

உங்கள் பிள்ளைகளுக்கு விவசாயத்தை பற்றி தெரிந்து கொண்டு கற்றுக்கொடுங்கள் அதுதான் நாளைய தலைமுறையின் எதிர்காலம்...

உங்கள் பிள்ளைகளின் கனவை கேளுங்கள் அவர்களின் எதிர்கால ஆசையை கேளுங்கள் அதன்படி அவர்களுக்கான பாதையை வகுத்து கொடுங்கள்...

3 வேலையும் குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுங்கள் அப்போதுதான் குடும்பத்தில் ஒரு நல்ல இணக்கம் ஏற்படும்...

உங்கள் சொந்தங்களை நாளைய தலைமுறைக்கு சொல்லிக்கொடுங்கள் உங்கள் விருப்பு,வெறுப்புகளை அவர்களிடம் விதைக்காதீர்கள்...

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback