ஈராக்கில் வானில் தோன்றிய காட்சி வீடியோ உண்மையா? உலகம் அழிந்துவிடுமா? உண்மை என்ன
அட்மின் மீடியா
0
ஈராக்கில் வானத்தில் தோன்றிய காட்சிகளை பார்த்து மக்கள் அச்சத்துடன் உலகம் அழிந்து விடும்மோ என்று அழுதுகொண்ட காட்சி என்று ஒரு செய்தியுடன் ஒரு வீடியோவையாயும் சமுகவளைதளத்தில் பலர் ஷேர் செய்கின்றார்கள்
அந்த செய்தியின் உண்மை என்ன என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்ப வேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன
நிபிரு அல்லது பிளானட் எக்ஸ் என ஒரு சூரியனை போல் உள்ள ஒரு ஒரு நெருப்பு கிரகம் சூரியனுக்கு அருகில் உள்ளதாகவும் அது பூமியை நோக்கி வந்து கொண்டு இருப்பதாகவும் அந்த கிரகம் பூமி மீது மோதி பூமியை அழித்துவிடும் என்று பல ஆண்டுகளாக ஒரு கட்டுகதை உலாவி வருகின்றது
இது 2000 இல் பூமியைத் தாக்கும் என்று ஒரு கட்டுகதை பரவியது ஆனால் ஒருபோதும் வரவில்லை.
அதே போல் 2010 ம் ஆண்டும் கூறபட்டது ஆனால் ஒருபோதும் வரவில்லை.
அதே போல் 2012 ம் ஆண்டும் கூறபட்டது ஆனால் ஒருபோதும் வரவில்லை.
அதே போல் 2017 ம் ஆண்டும் கூறபட்டது ஆனால் ஒருபோதும் வரவில்லை.
ஏன் 2020 ம் ஆண்டும் உலகம் அழிந்து விடும் என்று கட்டுகதைகள 2019 டிசம்பர் மாதம் பரவியது. ஆனால் கட்டுகதைகளின் ஆண்டுகளும் வடிவங்களும் மாறுகின்றது ஆனால் பூமி எப்போதும் போல் தன் பாதையில் சென்று கொண்டுதான் இருக்கின்றது
சரி இது குறித்து நாசா என்ன கூறுகின்றது பிளானட் எக்ஸ், அல்லது நிபிரு, என்ற ஒரு கிரகமே இல்லை என்றும் இது ஒரு இணைய புரளி என்று தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகின்றது
சரி இது குறித்து நாசா என்ன கூறுகின்றது பிளானட் எக்ஸ், அல்லது நிபிரு, என்ற ஒரு கிரகமே இல்லை என்றும் இது ஒரு இணைய புரளி என்று தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகின்றது
எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்றாலும், பிளானட் எக்ஸ் பற்றிய கட்டுக்கதைகள் ஆன்லைனில் தொடர்ந்து நிலைத்திருக்கின்றன.
அந்த கட்டுகதையினை நிருபிக்க அடிக்கடி இனையத்தில் பல கிராபிக்ஸ் வீடியோக்கள் வலம் வருகின்றன அது போன்ற ஒரு கிராபிக்ஸ் வீடியோவினை தற்போது பலர் பரப்புகின்றார்கள்
அந்த ஒரு வீடியோவினை சற்று உற்று நோக்கினால் சில உண்மைகள் புரியும்
சந்தேகம் 1
அந்த வீடியோவில் மக்கள் அலறும் சத்தம் கேட்கின்றது ஆனால் ஒருவர் கூட அந்த வீடியோவில் இல்லை
சந்தேகம் 2
உலகில் இதுவரை அப்படி ஒருகிரகம் இவ்வளவு அருகில் வந்தது இல்லை. சரி ஒரு வாதத்திற்க்கு அப்படியே வந்தது என்று வைத்து கொண்டால் கூட இப்போ அந்த கிரகம் எங்கே?
சந்தேகம்3
அதனை உற்றுனோக்கினால் புரியும் அது கிராபிக்ஸ் என்று
மேலும் தற்போது ஷேர் செய்யும் வீடியோ கடந்த 2017 ம் ஆண்டுமுதல் இனையத்தில் வலம் வரும் பொய்யான வீடியோவாகும்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியா ஆதாரம் 1
2017 ம் ஆண்டுமுதல் வலம் வரும் வீடியோ தமிழில்
https://www.youtube.com/watch?v=F8XYI3F-lM8
அட்மின் மீடியா ஆதாரம் 2
2017 ம் ஆண்டுமுதல் வலம் வரும் வீடியோ
இந்த வீடியோவின் பின்னணியில் எந்த அலறல்களும் இல்லை. பீதியடைந்த மக்களின் குரல்களும் இல்லை
https://www.youtube.com/watch?v=ik8XOnLyRSk&feature=emb_title
அட்மின் மீடியா ஆதாரம் 3
அது போல் ஒரு கிரகமே இல்லை என நாசா அறிவித்த வீடியோ
https://www.youtube.com/watch?v=x5cgeffigyY
அட்மின் மீடியா ஆதாரம் 4
https://turnbackhoax.id/2018/01/25/hoax-video-planet-nibiru-video-of-nibiru-planet/

Tags: மறுப்பு செய்தி