கொரோனாவால் இத்தாலியில் இன்று 800 பேர் இறந்து விட்டனர்... என ஷேர் செய்யபடு செய்தியின் உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
கொரோனாவால் இத்தாலில் இன்று 800 பேர் இறந்து விட்டனர்... சொல்லுவதற்க்கு வார்த்தை இல்லை...இவர்களுக்காக பிரார்த்தனை செய்யவும்.
என்று ஒரு செய்தியுடன் ஒரு போட்டோவையும் சமுகவளைதளத்தில் பலர் ஷேர் செய்கின்றார்கள்
அந்த செய்தியின் உண்மை என்ன என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்ப வேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன
கொரோனாவினால் இத்தாலி, சீனா உட்பட உலகமெங்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிர் இழந்தார்கள் அவர்களுக்காக பிரார்த்தனை செய்யப்பட்ட வேண்டும் என்பதில் எந்த விதமான மாற்று கருத்தும் இல்லை
ஆனால் பொய்யான செய்திகளை ஷேர் செய்து மக்களை பீதிக்குள்ளாக்காதீர்கள்
அந்த புகைபடத்தில் காட்டபடும் இடம் இத்தாலி இல்லை ஜெர்மன் நாடு ஆகும்
1945ம் வருடம் ஹிட்லரின் நாஜி வதை முகாம்களின் பாதிக்கப்பட்டவர்கள் நினைவாக 24.03. 2014, ஜெர்மனியின் பிராங்பேர்ட்டில், கட்ஸ்பாக் பகுதியில் 528 பேரின் உயிர் இழப்பை நினைவுகூரும் வகையில் ஒரு பகுதியாக மக்கள் சாலைகளில் படுத்து அஞ்சலி செலுத்தும் விதமாக ஒரு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்சியின் புகைப்படத்தை எடுத்து இன்று கொரோனாவால் இறந்தவர்கள் என பொய்யாக பரப்புகின்றனர்
அட்மின் மீடியா ஆதாரம்
https://pictures.reuters.com/CS.aspx?VP3=SearchResult&VBID=2C0FCIU02VL5R&SMLS=1&RW=1366&RH=625&POPUPPN=3&POPUPIID=2C0408TNIK7OR
https://pictures.reuters.com/CS.aspx?VP3=SearchResult&VBID=2C0FCIU02VL5R&SMLS=1&RW=1366&RH=625&POPUPPN=3&POPUPIID=2C0408TNIK7OR
அட்மின் மீடியா ஆதாரம்
பலரும் ஷேர் செய்யும் புகைபடத்தில் உள்ள இடம் கூகுள் ஸ்ட்ரீட் வியூ
பலரும் ஷேர் செய்யும் புகைபடத்தில் உள்ள இடம் கூகுள் ஸ்ட்ரீட் வியூ
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி