31 ம்தேதிவரை தமிழகம் முழுவதும் அனைத்து நகை கடைகளும் மூடல் : நகைகடை உரிமையாளர் சங்கம் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
கரோனா அச்சுறுத்தலால் தமிழகம் முழுவதும் நகைகடைகள் மார்ச் 31ம் தேதி வரை மூடப்படுகிறது
கரோனா வைரஸ் தொற்றுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது.
அதன்படி, கரோனா முன்னெச்சரிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள நகைக் கடைகளை மார்ச் 31-ம் தேதி வரை மூட நகை வணிகர் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி குறிப்பிட்டுள்ளார்.
ஏனெனில், நகைக்கடையில் ஒருவர் தொட்ட பின்னர் நகைகளை இன்னொருவர் தொட்டுக் கையாளுவதால் வைரஸ் தொற்று பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்
Tags: முக்கிய அறிவிப்பு