Breaking News

22 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை யாரும் வெளியில் வரவேண்டாம்: பிரதமர் வேண்டுகோள்

அட்மின் மீடியா
1
இன்று நாட்டுமக்களுக்கு உரையாற்றிய பாரத பிரதமர் மோடி அவர்கள்

நாம் ஆரோக்கியமாக இருந்தால் தான் உலகம் ஆரோக்கியமாக இருக்கும்

கொரோனாவுக்கு மருந்தே இல்லாத நிலையில், நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் அதற்காக, கூட்டமாக கூடுவதை மக்கள் தவிர்த்துவிட்டு, வீடுகளில் இருக்க வேண்டும்.

கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா பற்றிய தகவல்களை கவலையுடன் உலகம் பார்த்து வருகிறது

அதிக மக்கள்தொகை கொண்ட நம்மை போன்ற ஒரு வளரும் நாட்டிற்கு அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகப்பெரிய சவால்

மார்ச் 22ம் தேதி இந்த மக்களின் ஊடரங்கை நாடு கடைப்பிடிக்க வேண்டும் 
மக்கள் தங்களுக்குத் தாங்களே ஊரடங்கு உத்தரவை அமல்படுத்திக் கொள்ள வேண்டும் 
கொரோனா போன்ற சவால்களை சந்திக்க நாம் எப்படி தயார் நிலையில் இருக்கிறோம் என்பதை அறிய இது உதவும் 

மருத்துவர்கள், ஊடகத்தினர் உள்ளிட்டோருக்கு மக்கள் தொந்தரவு கொடுக்க வேண்டாம்..

தேவையில்லாமல் மருத்துவமனை செல்வதை தவிர்க்கவும்.

மருத்துவ சந்தேகங்களுக்கு அவசரஉதவி எண்ணை அழையுங்கள்

முதியவர்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்

இரவு நேரங்களில் வெளிவருவதை தவிர்ப்பது நல்லது

தற்போது நாட்டு மக்களிடம் நான் ஒத்துழைப்பை வேண்டுகிறேன்

கொரானா வைரஸ் ஏற்படுத்தக்கூடிய பொருளாதாரப் பிரச்சனைகளை சமாளிக்க தனி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது

ஏழைகள் யாரும் பாதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது

கொரோனாவை கட்டுப்படுத்த அறிவியல் இதுவரை நமக்கு உதவவில்லை

கொரோனா போன்ற உலகளாவிய தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்திற்கு இந்தியா எவ்வளவு தயாராக உள்ளது என்பதைப் பார்க்கவும் சோதிக்கவும் இதுவே நேரம்

கொரோனாவிற்காக விடுப்பு வழங்கினால், சம்பள பிடித்தம் செய்யக்கூடாது.

இது இக்கட்டான சூழல்.வதந்திகளை நம்பாதீர்கள்

போர்க்காலங்களில் இரவு நேரங்களில் நாம் எப்படி இருப்போமோ அப்படி இருக்க வேண்டும்

என பாரத பிரதமர் மோடி அவர்கள் அறிவித்துள்ளார்

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback

1 Comments