Breaking News

குடிநீர் கேன் நிறுவனங்கள் வேலைநிறுத்தம்! அறிவிப்பு

அட்மின் மீடியா
0
 சென்னையில் தண்ணீர்த் தட்டுப்பாடு அபாயம்!
கேன் குடிநீர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிக்கப் பட்டிருக்கிறது. இன்று மாலை 6 மணி முதல் வேலை நிறுத்தம் தொடங்கும் என்று, கேன் குடிநீர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
 
 

அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூட உத்தரவிட்ட விவகாரத்தில், உத்தரவை அமல்படுத்தாவிட்டால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும், 'மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தலைமை செயலாளரை ஆஜராக உத்தரவிட நேரிடும்' என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Tags: முக்கிய அறிவிப்பு

Share this