Breaking News

ராசா மசூதியில் சிவலிங்கம் செய்தி உண்மையா?

அட்மின் மீடியா
0
உலகின் மிக பழமையான ராசா மசூதி!அரபு நாட்டில் உள்ளது! இதன் சிறப்பம்சம் என்னவென்றால் சிவலிங்கம் மற்றும் இரண்டு நந்திகள் இதில் பொறிக்கப்பட்டுள்ளதுதான் ஜூம் செய்து பார்க்கவும் என்று  ஒரு புகைப்படத்தைபலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின்  மீடியா களம் கண்டது


ஆம் அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?


முதலில்  இந்த கட்டிடம் மசூதியே இல்லை பார்க்க மசூதி போல இல்லை. 

மசூதிக்கு இருக்க வேண்டிய மினாரா அது இல்லை

மசூதிக்கு இருக்க வேண்டிய டூம் இல்லை

மேலும் அந்த புகைப்படம் எடுக்கபட்டுள்லது இந்தியாவில் தான்

மேலும் அந்த கட்டிடத்துக்கு பின்னால் ஆட்டோ ஒன்றில் மக்கள் தொத்திக்கொண்டு செல்லும்  காட்சி இருக்கின்றது ஆகையால் அது இந்தியாதான்

உண்மையில் உலகில்  ராசா மசூதி என்று மசூதியே இல்லை என்பது தெரியவந்ததுள்ளது

உலகின் பழமையான மசூதிகள் எல்லாம் மிகப் பிரம்மாண்டமாக இருக்கும் ஆனால் பொய்யாக பரவும் படத்தைப் பார்க்கும் போது அந்த இடத்துக்குள் 5-10 பேருக்கு மேல் தொழுகை செய்ய முடியாது எனவே அது மசூதியாக இருக்காது என்று அட்மின் மீடியா கருதுகின்றது

மேலும் இந்த புகைப்படம் கடந்த 2016 ம் ஆண்டு முதல் பல பொய்யான கற்பனை கதைகளுடன் அடிக்கடி வதந்தியாக பரவுகின்றது

மேலும் 2016ம் ஆண்டே HOAX SLAYER  என்ற தளம் இது பொய் என்று குறிப்பிட்டுள்ளது

அட்மின் மீடியா ஆதாரம்

https://www.facebook.com/SMHoaxSlayer/posts/important-many-were-asking-me-about-shivling-found-in-oldest-mosque-named-raasa-/274542506214487/


அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள அட்மின் மீடியா ஆப் டவுன் லோடு செய்து கொள்ளுங்கள்

https://play.google.com/store/apps/details?id=com.adminmedia.app&hl=en

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback