Breaking News

பாபர் மசூதி கட்ட உபி அரசு அளித்த 5 ஏக்கர் இடத்தில் மருத்துவமனை, மற்றும் நூலகம் கட்ட சன்னி வக்பு வாரியம் முடிவு

அட்மின் மீடியா
0
அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மசூதி கட்டுவதற்கு உத்தரப்பிரதேச அரசு அளித்த ஐந்து ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம் ஏற்றுக்கொண்டுள்ளது.


பாபர் மசூதி  வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9 ம்தேதி  உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் பாபர் மசூதி இருந்த  2.77 ஏக்கர் நிலம் இந்துக்களுக்கே சொந்தம் என்றும் அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டிக்கொள்ளலாம் என்றும் தீர்ப்பளித்தது. அத்துடன் பாபர் மசூதி இடிக்கப்பட்டதையும்   உச்ச நீதிமன்றம் கண்டித்தது


மேலும்  பாபர் மசூதி கட்ட அயோத்தியிலேயே ஐந்து ஏக்கர் நிலத்தை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
 
அதன்படி உத்தரப்பிரதேச அரசு அயோத்தியில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தூரம் தள்ளி தனிப்பூர் என்ற கிராமத்தில் ஐந்து ஏக்கர் நிலத்தை உத்தரப்பிரதேச அரசு ஒதுக்கியது.

இது சம்மந்தமாக இன்று  சன்னி முஸ்லீம் மத்திய வக்பு வாரியத்தின் கூட்டம் லக்னோவில் நடந்தது

இந்த கூட்டத்தில் மசூதி கட்டுவதற்காக உத்தரப்பிரதேச அரசு கொடுத்த ஐந்து ஏக்கர் நிலத்தை ஏற்றுக்கொள்வது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. . 

மேலும் அந்த  இடத்தில் மருத்துவமனை, மற்றும் நூலகம் ஆகியவையும் கட்டுவதென தீர்மானிக்கப்பட்டது. 
 
source:
https://www.news18.com/news/india/ayodhya-case-sunni-waqf-board-accepts-five-acre-land-allotted-by-up-govt-to-build-mosque-2513373.html

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback