விபத்தில் மரணம் அடைந்தால் ரூ.4 லட்சம் இழப்பீடு- தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கான இழப்பீட்டுத் தொகை ரூ. 4 லட்சமாக உயர்த்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்துடன் (எல்.ஐ.சி.) இணைந்து வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்துக் குடும்பங்களும் பயனடையும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள, ‘புரட்சித்தலைவி அம்மா விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்திற்கான’ வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
இயற்கை மரணங்களில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ரூ. 2 லட்சமாக உயர்த்தப்படும்.
விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கான இழப்பீட்டுத் தொகை ரூ. 4 லட்சமாக உயர்த்தப்படும். விபத்தினால் நிரந்தர ஊனமுற்றோருக்கு உதவித் தொகை ரூ.2 லட்சம் வரை கணிசமாக உயர்த்தி வழங்கப்படும். இத்திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.
Tags: முக்கிய அறிவிப்பு