Breaking News

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை: 3 பேர் உயிரிழப்பு: தற்போதைய நிலை என்ன

அட்மின் மீடியா
0
குடியுரிமை சட்ட எதிர்ப்பு  போராட்டத்தில் வன்முறை: உயிரிழந்தோர் எண்ணிக்கை 3-ஆக உயர்வு...
இன்று டெல்லி யமுனா விஹார் பகுதியில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில்  வன்முறை வெடித்தது. 

துப்பாக்கிச்சூடு நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசியும் போலீசார் கூட்டத்தை கலைத்தனர். 

இந்த கலவரத்தில் தலைமை காவலர் ரத்தன் உயிரிழந்தார். 

இதனையடுத்து, வடக்கு மற்றும் தெற்கு டெல்லியில்  144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

வன்முறை போராட்டத்தின் போது காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் குரு தேக் பகதூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

இந்நிலையில், கலவரத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளார்கள் என அதிகாரபூர்வ தகவல் தெரிவிக்கின்றன

Source

https://www.news18.com/news/india/delhi-violence-live-updates-police-constable-killed-as-pro-section-144-imposed-in-10-areas-of-northeast-delhi-2513385.html

ஜாஃபராபாத்தை சேர்ந்த முகமது சுல்தான் மற்றும் ஷாஹித் ஆல்வி என்ற ஆட்டோ ஓட்டுநரும் இந்த வன்முறை சம்பவங்களில் இறந்துள்ளதாக போலீசார்  தெரிவித்துள்ளனர்.


இந்த பகுதியில் நடந்த வன்முறை பற்றி தெளிவான தகவல் எதுவும் தெரியவில்லை என்றாலும், சமூக ஊடகங்கள் மற்றும் சில தொலைக்காட்சிகளில் வெளியான படங்களில் கல் எறியப்படும் காட்சியும், வாகனங்களில் இருந்து தீப்பிழம்பு வெளியேறும் காட்சிகளும் தென்படுகின்றன.

பொது மக்களின் சொத்துகளை தீக்கிரையாக்கி, சூறையாட முயன்ற கூட்டத்தை கட்டுப்படுத்த தாங்கள் தடியடி நடத்த வேண்டி இருந்தது என்று போலீசார் தெரிவித்தனர்.


வட கிழக்கு டெல்லியின் இணை போலீஸ் ஆணையரான வேத் பிரகாஷ் சூர்யா நடந்த சம்பவங்கள் குறித்து கூறுகையில், ''மோதலில் ஈடுபட்ட இரு தரப்புகளிடமும் நாங்கள் பேசினோம். தற்போது இங்கு அமைதியான சூழல் காணப்படுகிறது. நிலைமை கட்டுக்குள்  உள்ளது'' என்று குறிப்பிட்டார். 


மேலும், வட கிழக்கு டெல்லியில் உள்ள ஜாஃபராபாத் மற்றும் மாஜ்பூர் பகுதிகளில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக முஸ்லீம் பெண்கள் நடத்திவரும் போராட்டம் இன்றும் தொடர்ந்தது.


கடந்த வார இறுதியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக மற்றும் எதிராக இரு குழுக்கள் இடையே நடந்த போராட்டத்தில் கற்கள் வீசப்பட்டு போராட்டக் களம் வன்முறை களமாக மாறியது.


இந்நிலையில் டெல்லியில் உள்ள 10 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். 


இதற்கிடையே டெல்லி வன்முறை சம்பவங்கள் குறித்து கருத்து வெளியிட்ட மத்திய உள்துறை செயலாளரான அஜய் குமார் பல்லா, ''தற்போது மூத்த அதிகாரிகள் களத்தில் உள்ளனர். போதுமான அளவில் பாதுகாப்பு படையினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். தற்போது நிலைமை கட்டுக்குள் இருக்கிறது'' என்று தெரிவித்தார்.


ஜாஃபராபாத் வன்முறை சம்பவத்தில் காயமடைந்த 20க்கும் மேற்பட்டவர்கள் டெல்லி ஜிடிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும் ஜிடிபி மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source 

https://www.bbc.com/tamil/india-51613973


Give Us Your Feedback