Breaking News

CAA மக்களுக்கு எதிரானது என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை மடாதிபதி மிரட்டினாரா? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
CAA  குடியுரிமை சட்டம் மக்களுக்கு எதிரானது இது மோசமானது என குருஜி Guruji  பேசும் போது இடையே குறுக்கிட்டு கோபம் அடைந்தார் கர்னாடக முதல்அமைச்சர்.. என ஒரு செய்தியிடன் ஓர் வீடியோவையும் பலர் சமூக வலைதளங்களில் பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்

அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மைதன்மை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

ஆம் இது தவறான செய்தி, 

தமிழ் நாட்டில் யாருக்கும் கன்னட மொழி புரியாது  என்று - யாரோ, எதையாவது அடிச்சி விட்டு அது பரவலாக வாட்சப் குரூப்பில் பரவுகிறது.


உண்மை என்னவென்றால்....

அந்த சுவாமிஜி CAA பற்றி பேசவே இல்லை, அவர்கள் சமூகத்தை சார்ந்த ஒருவருக்கு அமைச்சர் பதவி  கேட்கிறார்... 


நேற்று கர்நாடக மாநிலம் தாவணகெரே நகரில் பஞ்சமாஷாலி சமுதாயத்தினரின் மாநாடு நடைபெற்றது.

இதில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய பஞ்சமாஷாலி மடத்தின் மடாதிபதி வசனாநந்தா சுவாமி, தங்கள் சமுதாயத்தை சேர்ந்த எம்.எல்.ஏ. முருகேஷ் நிரானிக்கு அமைச்சர் பதவி வழங்கா விட்டால், ஒட்டுமொத்த பஞ்சமாஷாலி சமுதாயமும் உங்களை புறக்கணித்து விடும் என முதலமைச்சர் எடியூரப்பாவை பார்த்து மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த முதலமைச்சர் எடியூரப்பா, இருக்கையை விட்டு எழுந்து இது போன்று பேச வேண்டாம் என கோபத்துடன் மடாதிபதியிடம் கூறினார். ஆனாலும் மடாதிபதி, முதலமைச்சர் எடியூரப்பாவை பார்த்து அமைதியாக இருக்கையில் அமரும்படி மிரட்டும் வகையில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அமைதியான முதலமைச்சர் எடியூரப்பா, மடாதிபதி கூறியதை எல்லாம் செய்ய முடியாது என்றும், விண்ணப்பம் வைக்கலாம், தம்மை மிரட்ட முடியாது என்றும் கூறினார்.

அதில் உடன்பாடில்லாத எடியூரப்பா கோபம் அடைகிறார். இந்த சண்டைக்கும்,CAA க்கும் துளியும் சம்பந்தம் இல்லை

அட்மின் மீடியா ஆதாரம்....

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback