Breaking News

CAA வுக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் 150 எம்.பிக்கள் தீர்மானம்

அட்மின் மீடியா
0
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஐரோப்பிய யூனியன் எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் அடுத்த வாரத்தில் தீர்மானம் கொண்டு வரவுள்ளனர்.

அடுத்த வாரம் பிரசல்ஸ் நகரில் ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தின் கூட்டத் தொடர் தொடங்கவுள்ளது.


அந்த கூட்டத் தொடரில் 5 பக்கங்கள் கொண்ட தீர்மானத்தை 150-க்கும் மேற்பட்ட எம்பிக்கள் தாக்கல் செய்யவுள்ளனர். 

அந்த தீர்மானத்தில் அந்த சட்டம் பயன்படுத்தப்பட்டால், ஏராளமானவர்கள் நாடற்றவர்களாக ஆக்கப்படுவார்கள். குடியுரிமை தொடர்பான சர்வதேச கடமைகளை மீறும் வகையில் இந்தியா இச்சட்டத்தை கொண்டுவந்துள்ளது.

இந்த சட்டம் அடிப்படையிலேயே பாரபட்சமானது என்று ஐ.நா. மனித உரிமை ஆணையர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, ஐரோப்பிய யூனியன் தலையிட்டு மனித உரிமைகளை காப்பதுடன், இந்த சட்டத்தை நிறுத்திவைக்க செய்ய வேண்டும் என்று தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback