வீடியோ: மசூதியில் இந்து முறைப்படி திருமணம் இது தான் மத ஒற்றுமை
அட்மின் மீடியா
0
கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், செருவாலி நகரைச் சேர்ந்தவர், பிந்து. இவரது கணவர் அசோகன் இறந்து விட்டார். இவர்களுக்கு அஞ்சு என்ற பெண் உள்ளார். தன் கணவர் அசோகன் இறந்தபின், மிகவும் கஷ்டப்பட்டு, வாழ்க்கை நடத்தி வருகிறார்,
பிந்து.இந்நிலையில், தன் மகள் அஞ்சுவுக்கும், சரத் என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க, பிந்து ஏற்பாடு செய்தார். திருமண செலவுக்கு பணம் இல்லாததால், செருவாலி முஸ்லிம் ஜமாத்தின் செயலர், நஜுமுதீன் உதவி கேட்டார். இது பற்றி, ஜமாத் நிர்வாகிகளுடன், நஜூமுதீன் ஆலோசனை நடத்தினார். பிந்துவின் மகள் திருமணத்துக்கு உதவ, ஜமாத் சம்மதித்தது.

அஞ்சுவுக்கு, 10 சவரன் நகையும், 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களும், ஜமாத் சார்பில் வழங்க முடிவு செய்யப்பட்டது. அத்துடன், அஞ்சுவின் திருமணத்தை, மசூதி வளாகத்திலேயே, இந்து முறைப்படி நடத்த, அப்போது முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து, நேற்று காலை, செருவாலி மசூதியில், அஞ்சுவுக்கும், சரத்துக்கும், இந்து முறைப்படி, வேத மந்திரங்கள் முழங்க, திருமணம் நடந்தது. திருமணத்துக்காக, ஜமாத் சார்பில், ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு, சைவ உணவு விருந்து தயாரிக்கப்பட்டது.
கேரளாவில், மசூதியில், இந்து முறைப்படி, ஒரு ஜோடிக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதற்கு, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
வீடியோவை காண

Tags: முக்கிய செய்தி