Breaking News

தமிழக பா.ஜ.க தலைவராக எச்.ராஜா தேர்வு என சான்றிதழ் செய்தி உண்மையா?

அட்மின் மீடியா
0
தமிழக பாஜக தலைவராக எச்.ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று ஒரு சான்றிதழ் பலராலும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது





ஆம் அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன


தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து தமிழக பா.ஜ.க-வுக்கு இதுவரை தலைவர் நியமிக்கப்படவில்லை. விரைவில் தமிழக பா.ஜ.க-வுக்கு தலைவர் நியமிக்கப்படுவார் என்று செய்திகள் மட்டும் ஊடகங்களில் அடிக்கடி வந்து கொண்டு உள்ளது
 


ஆனால் பாஜக இதுவரை தமிழகத்தில் தலைவர் நியமிக்கவில்லை என்பது தான் உண்மை


தமிழக பா.ஜ.க தலைவராக எச்.ராஜா  நியமிக்கப்பட்டாரா, இல்லையா என்ற ஆய்வுக்குள் நாம் செல்லவில்லை. தமிழக பா.ஜ.க தலைவர் பதவிக்கான தேர்தலில் எச்.ராஜா வெற்றி பெற்றதாக சான்றிதழ் உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டதில் அது போலியானது என்பது தெரியவந்துள்ளது.

எனவே பொய்யான செய்திகளை ஷேர் செய்யாதீர்கள்


Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback