Breaking News

சிஏஏ சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது - மீண்டும் உச்சநீதிமன்றம் மறுப்பு

அட்மின் மீடியா
0
சிஏஏ சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இதுவரை 144 மனுக்கள் தாக்கல் செய்யபட்டுள்ளன
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 

அம்மனு மீதான விசாரணையை நடத்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு,  சிஏஏ வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க 4 வாரம் அவகாசம் அளித்து விசாரணையை 5 வாரத்திற்கு ஒத்திவைத்தது. 

மேலும்  குடியுரிமை சட்டத்திற்கு எதிரான அனைத்து  வழக்குகளும் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி அமைத்து உத்தரவிட்டது. 

அனைத்து மனுக்களையும் விசாரிக்காமல் ஒருதலைபட்சமான உத்தரவு பிறப்பிக்க போவதில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு திட்டவட்டமாக மறுத்து ஃ விட்டது.  

மேலும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான உத்தரவு பிறப்பிக்க உயர் நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback