குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரளா மனு
அட்மின் மீடியா
0
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு CAA க்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரளா அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பலரும் வழக்கு தொடுத்தார்கள் அவ்வழக்குகள் அனைத்தும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான பெஞ்சில் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் கேரளா அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் சி.ஏ.ஏ., அரசியல் சாசனத்துக்கு எதிரானது என குறிப்பிட்டு சி.ஏ.ஏ.வுக்கு எதிராக மனுத் தாக்கல் செய்துள்ளது
மேலும் கேரளா அரசு ஏற்கனவே சட்டசபையில், சி.ஏ.ஏ.வை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்க்கது அதையும் தாண்டி சி.ஏ.ஏ.வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கும் முதல் மாநில அரசும் கேரளாதான் என்பது குறிப்பிடத்தக்கது
Tags: முக்கிய செய்தி