பயன்படுத்தப்படாத டெபிட், கிரெடிட் கார்டுகளை ரத்து செய்ய அனைத்து வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு!
அட்மின் மீடியா
0
ஆன்லைன் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படாத டெபிட், கிரெடிட் கார்டுகளை ரத்து செய்ய அனைத்து வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு!
ஆன்லைன் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படாத டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மீது நடவடிக்கை எடுக்க ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு, வரும் மார்ச் மாதத்தில் இருந்து அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்று திட்டத்தைக் கொண்டுவந்துவிட்டு ஆளுக்கு ஒரு டெபிட் கார்டை வங்கிகள் கொடுத்துவிட்டன. வங்கிக் கணக்கை வைத்து என்ன செய்வது என்று கிராமப்புறங்களில் உள்ள மக்கள் அதைப் பயன்படுத்துவதே இல்லை. மினிமம் பேலன்ஸ் வைத்தில்லை என்று கூறி கிராமப்புற மக்களிடமிருந்து கோடிக் கணக்கில் அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்த நிலையில், இதுவரை பயன்படுத்தப்படாத டெபிட் மற்றும் டெபிட் கார்டுகளை ரத்து செய்துவிடும்படி ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் புதிய வழிகாட்டுதலை அனுப்பியுள்ளது.
ஆன்லைன் பரிவர்த்தனைக்கு கார்டுகளை பயன்படுத்தாதவர்கள் பெரும்பாலும் ஊரக பகுதிகளை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இத்தகைய கார்டு விவரங்களை திருடியே மோசடி நடைபெறுவதால் அதனை தடுக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
Tags: முக்கிய செய்தி