சீனா அதிபர் அரபு நாடுகளுக்கு வேண்டுகோள் எங்களுக்கு துவா செய்யுங்கள் அரபு டிவிசேனல்களில் ஒளிபரப்பு
என்று ஒரு செய்தியினை பலரும்  சமுகவலைதளத்தில் ஷேர் செய்கின்றார்கள்

அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

ஆம் அந்த செய்தி பொய்யானது.  யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?

கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த சீன அரசு தீவிரமாக முயன்று வருகிறது.

ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் நகரில்தான் கடந்த டிசம்பர் மாதம் முதல் முறையாக இந்த வைரஸ் பரவத் தொடங்கியது. 

அந்த நகரத்தில் 11 மில்லியன் (1.1 கோடி) பேர் வசிக்கிறார்கள்.

கொரோனா வைரஸால் சீனாவில் இதுவரை 106 பேர் உயிரிழந்துள்ளனர். 4500க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாடு ஒரு "ஆபத்தான சூழ்நிலையை" எதிர்கொள்கிறது என்று சீன ஜனாதிபதி  அரசு தொலைக்காட்சி தெரிவித்தார்

ஒரு சிலர் அந்த செய்தியை எடுத்து சீனா அதிபர் அரபு நாடுகளுக்கு வேண்டுகோள் எங்களுக்கு துவா செய்யுங்கள் அரபு டிவிசேனல்களில் ஒளிபரப்பு  என அரபி வசகத்துடன் பொய்யாக பரப்புகின்றார்கள்.

ஆபத்தான கொரோனா வைரசில் இருந்து மீள சீன மக்களுக்காக நாம் துவா செய்வோம் என்று பரப்புங்கள் ஆனால் பொய் செய்தி பரப்பாதீர்கள்

அட்மின் மீடியா ஆதாரம்

சீன அதிபரின் போட்டோ உண்மயில் தைவான் கொள்கை குறித்த வரலாற்று அறிக்கையின் நாற்பதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மண்டபத்தில் சீன ஜனாதிபதி ஆற்றிய உரைக்காக 2/1/2019 தேதியிட்ட வீடியோவில் இருந்து ஃபோட்டோஷாப் செய்யப்பட்டது.

Share To:
Share To:

அட்மின்மீடியா

Post A Comment:

0 comments so far,add yours