Breaking News

நெல்லை கண்ணன் கைது

அட்மின் மீடியா
0
பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகாரில் நெல்லை கண்ணன்  கைது

பெரம்பலூர் அருகே தனியார் விடுதியில் தங்கியிருந்த நெல்லை கண்ணனை போலீசார் கைது செய்தனர்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திருநெல்வேலியில் நடைபெற்ற போராட்டத்தில் நெல்லை கண்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியுள்ளார்

நெல்லை கண்ணனின் பேச்சுக்கு பா.ஜ.க சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழக பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள், கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து நெல்லை கண்ணன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.

பா.ஜ.க சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நெல்லை கண்ணன் மீது நெல்லை போலீசார்  மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய புகாரில் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. 

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback