Breaking News

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதிய 99 பேருக்கு வாழ்நாள் தடை? முறைகேடு நடந்தது எப்படி

அட்மின் மீடியா
0
கடந்த ஆண்டு செப்டம்பர் நடைபெற்ற குரூப் 4 தேர்வின் முடிவுகள் நவம்பர் 25ஆம் தேதி வெளியானது. அதில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வெழுதிய 40 பேர் தர வரிசை பட்டியலில் முதலிடம் பிடித்திருந்தார்கள் இதனால்  தேர்வு மையங்களில் ஏதேனும் முறைகேடு நடந்திருக்கக் கூடும் என்று குற்றச்சாட்டு எழுந்தது.

தேர்வு மையங்களில் முறைகேடு நடந்துள்ளதா என்பதை உறுதி செய்ய பல்வேறு கட்ட விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகத்திற்கு உட்பட்ட அந்த தேர்வர்களின் வினாத்தாள்கள் ஆய்வு செய்யப்பட்டன.

மேலும் அந்த தேர்வு ந்ழுதியவர்களை  கடந்த 13 ஆம் தேதி நேரில் அழைத்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விசாரித்தனர்.

குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டதால் சர்ச்சைக்குரிய 9 தேர்வு மையங்களில் நடந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுக்கிறது  மேலும் டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்பட்ட 99 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த 99 பேர்களும் இனிமேல் வாழ்நாள் முழுவதும் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் என்று டிஎன்பிஎஸ்சி அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
 
குரூப் 4 முறைகேடு தொடர்பாக வட்டாட்சியர்கள் ராமேஸ்வரம் மையத்தில் தேர்வு அதிகாரியாக இருந்த பார்த்தசாரதி, மற்றும் கீழக்கரை மையத்தில் தேர்வு அதிகாரியாக இருந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


முறைகேடு நடந்தது எப்படி?

இடைத்தரகர்களின் ஆலோசனையின் பேரில் கீழக்கரை மற்றும் இராமேஸ்வரம் தேர்வு மையங்களைத் தேர்வு செய்துள்ளனர். அதன்பின் இடைத்தரர்களிடம் இருந்து பெற்ற சில மணி நேரங்களில் மறையக்கூடிய சிறப்பு மையினாலான பேனாவை பயன்படுத்தி, இடைத்தரகர்களிடமிருந்து பெற்ற விடைகளைக் தேர்வர்கள் விடைத்தாளில் குறித்துள்ளனர்.

இதன்பின் சந்தேகத்திற்குரிய இடைத்தரகர்கள் தேர்வுப்பணியில் ஈடுபட்டிருந்த நபர்களின் துணையுடன், 52 தேர்வர்களின் விடைத்தாள்களில் திருத்தம் செய்து மாற்று விடைகளைக் குறித்து, அதே விடைத்தாள் கட்டுகளில் சேர்த்து வைத்துள்ளனர். இதில் 39 தேர்வர்கள் முதல் 100 தரவரிசைக்குள் வந்துள்ளனர்.

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback