பெங்களூரில் 100 வங்கதேச அகதிகள் வீடுகள் இடிப்பு! உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் பெங்களூர் பகுதியில் வங்கதேச அகதிகள் சட்ட விரோதமாக வசித்து வந்த வீடுகள் என நினைத்து நூற்றுக்கணக்கான குடிசை வீடுகளை மாநகராட்சியைச் சேர்ந்தவர்கள் இடித்த சம்பவம் என பலரும் ஓர் செய்தியினை ஷேர் செய்கின்றார்கள்
அந்த சம்பவம் உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த சம்பவத்தின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
ஆம் அந்த சம்பவம் உண்மை தான்
கடந்த ஜனவரி 11-ம் தேதி கர்நாடகா மாநிலத்தின் பாஜக எம்எல்ஏ அரவிந்த் லிம்பாவள்ளி தனது ட்விட்டர் பக்கத்தில், ” மஹாதேவபுரா தொகுதிக்கு உட்பட்ட பகுதி பெல்லந்தூரின் காரியம்மனா அக்ரஹாராவில் சில பேர் சட்ட விரோதமாக கூடாரங்களை அமைத்து உள்ளனர். இந்த கூடாரப் பகுதிகளில் இருந்து சட்ட விரோதமான நடவடிக்கைகள் நடைபெறுகின்றன மற்றும் சுத்தமின்மையால் சுற்றுச்சூழல் மோசமாகி உள்ளது. எனவே இந்த பகுதி சட்டவிரோத நடவடிக்கையின் பகுதியாகி உள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிற பகுதியில் இருந்து வந்தவர்கள் இங்கு தங்கியுள்ளனர் மற்றும் அவர்களில் சிலர் வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது ” என வீடியோ மற்றும் புகைப்படங்கள் உடன் ட்வீட் செய்து இருந்தார்.
இதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 19 அன்று காவல்துறை பாதுகாப்புடன் பெங்களூர் நகராட்சியைச் சேர்ந்தவர்கள் அப்பகுதியில் அமைக்கப்பட்ட கூடாரங்களை இடித்து அகற்றியுள்ளனர்.
ஆனால், வீடுகள் அகற்றப்பட்ட நிகழ்விற்கு பிறகே அப்பகுதியில் வசித்து வந்தவர்கள் இந்தியர்கள் தான் எனத் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Tags: மறுப்பு செய்தி